10. நாடுகாண் காதை




              வெண்பா

காலை யரும்பி மலருங் கதிரவனும்
மாலை மதியமும்போல் வாழியரோ--வேலை
அகழால் அமைந்த அவனிக்கு மாலைப்
புகழால் அமைந்த புகார்


1
உரை
4

        காலை அரும்பி மலரும் கதிரவனும் - காலையில் உதித்து ஒளி விரியும் பரிதியும், மாலை மதியமும் போல் - மாலையில் உதிக்கும் வளருமியல்புடைய திங்களும் போல, வாழியரோ - வாழ்வதாக; வேலை அகழால் அமைந்த அவனிக்கு - கடலாகிய அகழோடு அமைந்த புவனிக்கு, மாலைப் புகழால் அமைந்த புகார் - மாலையெனப்படும் புகழோடு பொருந்திய காவிரிப்பூம் பட்டினம்.

       ஆல் - ஓடு. புகார் வாழியரோ என்க.

                            புகார்க்காண்டம் முற்றிற்று.