1. காடுகாண் காதை

5 கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம்
அந்தி லரங்கத் தகன்பொழி லகவயிற்
சாரணர் கூறிய தகைசால் நன்மொழி
மாதவத் தாட்டியும் மாண்புற மொழிந்தாங்கு


5
உரை
8

       கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம் - நிக்கந்தனுடை பள்ளியிடத்துள்ள முனிவர் யாவர்க்கும், அந்தில் அரங்கத்து அகன்பொழில் அகவயின் - ஆற்றிடைக் குறையாகிய அவ்
விடத்துப் பரந்த சோலையினிடத்து, சாரணர் கூறிய தகை சால் நன்மொழி - சாரணர் அருளிய தகுதி யமைந்த அறவுரையை, மாதவத்தாட்டியும் மாண்பு உற மொழிந்து - கவுந்தியடிகளும் இனிமையுற மொழிந்து ;

       நிக்கந்தன் - அருகன் ; நிக்கந்தனைக் கந்தன் என்றார். ஈண்டுக் கடவுளர் என்றது முனிவரை. இதனை, 1"தென்னவற் பெயரிய துன்னருந் துப்பின், தொன்முது கடவுள்" எனவும், 2"முத்தேர் முறுவலாய் நாமணம் புக்கக்கா, லிப்போழ்து போழ்தென் றது வாய்ப்பக் கூறிய, எக்கடவுண் மற்றக் கடவுள்" எனவும் வருவன வற்றானறிக. அரங்கம் - திருவரங்கமுமாம். சாரணர் கூறிய மொழி யாவது 'ஒளியுறு னல்லது போதார் பிறவிப் பொதியறையோர்' என்றதனை. அந்தில் -அசைநிலையுமாம்.


1. மதுரைக்கா, 40-1 2. கலித்தொகை, 93