நீல
மேகம் நெடும் பொற் குன்றத்து -- கரிய மேகம் உயர்ந்த பொன்மலையினிடத்து, பால்
விரிந்து அகலாது படிந்தது போல - பக்கங்களில் விரிந்து மிகாமல் படிந்த தன்மையை
ஒப்ப, ஆயிரம் விரிந்து எழு தலையுடை அருந்திறற் பாயற் பள்ளி - பரப்பி எழுந்த ஆயிரந்தலையினையுடைய
அரிய வலி பெற்ற பாம்பணையாகிய பள்ளிமீது, பலர் தொழுது ஏத்த - பலரும் வணங்கிப்
போற்ற, விரிதிரைக் காவிரி வியன் பெருந்துருத்தி - விரிந்த அலைகளையுடைய மிகப்
பெரிய காவிரியாற்
றிடைக்குறையில், திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும் - திருமகள் விரும்பி யுறையும்
மார்பையுடையோன் கிடந்த கோலத்தினையும் ;
நீல மேகம் படிந்ததுபோல வென்க.
நீல மேகமும் பொற் குன்றமும் திருமாலுக்கும் அனந்தனுக்கும் உவமை. 1"மின்னவிர்
சுடர்மணி யாயிரம் விரித்த, கவைநா வருந்தலைக் காண்பின் சேக்கை" என்பது பரிபாடல்.
1. பரி.
13 ; 7--12.
|