என்கண்
காட்டு என்று என் உளம் கவற்ற வந்தேன் - காட்டுவாயாகவென என் கண்கள் எனது உள்ளத்தைக்
கவலை செய்தலான் ஈண்டு வந்தேன் ; குடமலை மாங்காட்டு உள்ளேன் -
குடகமலைப் பக்கத்துள்ள மாங்காடு என்னும் ஊரிலுள்ளேன் ;
என்கண்
காட்டென்று கவற்ற வந்தேன் என்க. என்கண், எழுவாய். இனி, எனக்குக் காட்டுகவென்று
உள்ளம் கவற்றுதலால் வந்தேன் என உள்ளத்தை எழுவாயாக்கி யுரைத்தலுமாம் ; இதற்கு என்கட்
காட்டெனத் திரிதற்பாலது திரியாது நின்றதெனல் வேண்டும்.
|