1. காடுகாண் காதை


55
தென்னவன் நாட்டுச் சிறப்புஞ் செய்கையும்
கண்மணி குளிர்ப்பக் கண்டே னாதலின்
வாழ்த்திவந் திருந்தேன் இதுவென் வரவெனத்
தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு


54
உரை
57

       தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும் - பாண்டியனுடைய நாட்டின் சிறப்பினையும் அவன் கொடை முதலிய செய்கையினையும், கண்மணி குளிர்ப்பக் கண்டேன் ஆதலின் வாழ்த்தி வந்திருந்தேன் - கண்கள் குளிரும் வண்ணம் கண்டேன் ஆகலான் அவனை நாவால் வாழ்த்தி வந்திருந்தேன்; இது என் வரவு என - இதுவே எனது வருகையின் காரணமாகும் என்று, தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு - முத்தீயின் திறத்தில் உள்ளம் விரும்பியோனாகிய அம் மறையோன் கூறக் கேட்டு;