மா
மறை முதல்வ மதுரைச் செந்நெறி கூறு நீ என - கோவலன் அவனை நோக்கிப் பெரிய வேத
முதல்வனே மதுரைக்குச் செல்லும் செவ்விய நெறியினை நீ கூறுவாயாக என்று கேட்க, கோவலற்கு
உரைக்கும் -- அம்மறையோன் அவற்கு இதனைக் கூறுவான் ;
மறையோன்
பாண்டி நாட்டினைக் கண்டு ஆண்டு நின்றும் போந்தன னென்பதறிந்தமையால் அவனை மதுரைக்கேகும்
நெறி கேட்டனனென்க.
|