கோத்தொழிலாளரொடு
கொற்றவன் கோடி - அரசியற்றொழி லினையுடைய அமைச்சரோடு முறை செய்யாது அரசனும் கோல்
கோடலானே, வேத்தியல் இழந்த வியனிலம் போல - அரசியல் இழந்த அகன்ற நிலத்தைப்
போல, வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் - வேனிலாகிய அமைச்சனொடு வெவ்விய
கதிர்களையுடைய ஞாயிறாகிய அரசன், தான் நலம்திருக - நலம் வேறுபடுதலான், தன்மையிற்
குன்றி - தமது இயற்கை கெட்டு , முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து - முல்லை
குறிஞ்சி என்னும் இருதிணையும் முறைமை திரிந்து, நல் இயல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்து
- தமது நல்ல இயல்புகளை இழந்து தம்மைச் சேர்ந்தோரை நடுங்கும்
வண்ணம் துன்பத்தினை யுறுவித்து, பாலை என்பதோர் படிவம் கொள்ளும் காலை - பாலை எனப்படும்
வடிவினைக் கொள்ளும் இக் காலத்து , எய்தினிர் காரிகை தன்னுடன் - இக்காரிகையோடு
அடைந்தீர் ;
1"கோல
முல்லையுங் குறிஞ்சியு மடுத்தசில் லிடங்கள், நீல வாட் படைநீலிகோட்டங்களும்நிரந்து,
கால வேனிலிற் கடும்பகற் பொழுதினைப் பற்றிப், பாலை யுஞ்சொல லாவன வுளபரன் முரம்பு."
என்னும் திருத்தொண்டர் புராணச் செய்யுள் ஈண்டு அறியற்பாலது.
நலந்திருகல்-வெம்மை மிகுதல். கோடி இழந்த நிலம்போலக் கிழவனொடு வேந்தன் றிருகக்
குன்றித் திரிந்து இழந்து உறுத்துக் கொள்ளுங் காலையெனக் கூட்டுக. காரிகை தன்னுடன்
காலை யெய்தினிரென
மாறுக. காலை - காலம். தான் - அசை.
1. பெரியபு.
திருக்குறிப்பு; 15.
|