அறையும்
பொறையும் ஆரிடை மயக்கமும் நிறை நீர் வேலியும் முறைபடக் கிடந்த - கற்பாறையும்
சிறுமலையும் அரிய வழிகளின் கலப்பும் நிறைந்த நீர்க்கு வேலியாகிய ஏரிக்
கரையும் ஆய இவை அடைவுபடக் கிடந்த, இந் நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று - இந்த
மிக நீண்ட சுர நெறியைக் கடந்து சென்று, கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால்
-
கொடும்பாளூரின்கண் நெடுங்குளக் கரைக்கு உள்ளாகப் புக்கால், பிறைமுடிக் கண்ணிப் பெரியோன்
ஏந்திய - முடியிடத்துப் பிறையாகிய கண்ணியைச் சூடிய பெரியோனாகிய இறைவன் ஏந்திய,
அறைவாய்ச் சூலத்து அருநெறி கவர்க்கும் -
முக்கூறாக அறுக்கப்பெற்ற சூலம்போல மூன்று வழிகள் பிரியும்;
பொறை - துறுகல் எனினுமாம். ஆரிடையாவது ஆறலைப் போரும் ஊறுசெய் விலங்குமுடைத்தாய்
ஏற்றிழிவும் கவலைச் சின் னெறியுமாயிருப்பது. நிறை நீர்வேலி - பேய்த்தேர் என்றும்,
கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் - கொடும்பாளுர் நெடுங்குளம் என்னும் இரண்டூர்க்கும்
பொதுவாகிய ஏரிக்கரை என்றும் கூறுவர் அடியார்க்கு நல்லார். நீந்திப் புகவரிது என்பது
தோன்றப் புக்கால் என்றார். அறைவாய்ச் சூலம் என்பதற்குக் கண்ணோட்டமற்ற
வாயினையுடைய சூலம் எனலுமாம்.
|