அலறுதலை
மராமும் உலறுதலை ஓமையும் - விரிந்த தலையினையுடைய வெண்கடம்பும் காய்ந்த தலையினையுடைய
ஓமையும், பொரி அரை உழிஞ்சிலும் புல்முளி மூங்கிலும் - பொரிந்த தாளினையுடைய வாகையும்
தண்டு காய்ந்த புல்லாகிய மூங்கிலும், வரி மரல் திரங்கிய கரி புறக் கிடக்கையும்
- வரிகளையுடைய மரல் நீரின்மையாற் சுருங்கிய கரிந்து கிடக்குமிடங்களும்,
நீர் நசைஇ வேட்கையின் மான் நின்று விளிக்கும் கானமும் - நீருண்டலை விரும்பி அவ்
வேட்கையானே மான்கள் நின்று உளைக்கும் காடும், எயினர் கடமும் கடந்தால் - எயினர்
ஊரை யடுத்த வழியுமாய இவை உள ; இவற்றைக் கடந்து செல்லின், ஐவன வெண்ணெலும் அறைக்கண்
கரும்பும் - மலைச் சாரலில் விளையும் ஐவனமாகிய நெற்பயிரும் இலை அற்ற கணுக்களையுடைய
கரும்பும், கொய் பூந் தினையும் கொழும் புனவரகும்- கொய்யும் பருவத்தினையுடைய பொலிவு
பெற்ற தினையும் கொழுவிய புனத்தின்கண் விளைந்த வரகும், காயமும் மஞ்சளும் ஆய்கொடிக்
கவலையும் - வெள்ளுள்ளியும் மஞ்சளும் அழகிய கொடியினையுடைய கவலையும் , வாழையும் கமுகும்
தாழ்குலைத் தெங்கும் - தாழ்ந்த குலையினையுடைய வாழையும் கமுகும் தெங்கும், மாவும் பலாவும்
சூழ் அடுத்து ஓங்கிய - மாவும் பலாவும் ஆய இவை ஒன்றனை ஒன்று அடித்துச் சூழப் பெற்று
உயர்ந்த , தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் - பாண்டியனுடைய சிறுமலை என்னும்
பெயரினையுடைய மலை விளங்கித் தோன்றும் , அம் மலை வலங்கொண்டு அகன்பதிச் செல்லுமின்
- அம் மலையை வலத்திட்டு இடப்பக்கத்து நெறியானே மதுரைக் கண் செல்வீராக. ;
உழிஞ்சில் - உன்னமெனலுமாம். புல் - புறக்காழுடையன. வரி மரற்றிரங்கிய - விலங்கு
சுவைத்தலால் திரங்கிய எனலுமாம். திரங்கிய கிடக்கை., கரிபுறக்கிடக்கை யெனத் தனித்தனிக்
கூட்டுக.
எயினர் - மறவர். கரும்பு முதிர்தலான் இலையற்றதென்க. இனி, முறிக்கும் பருவத்தைத்
தன்கட்கொண்ட கரும்பெனவுரைப்பர் அடியார்க்கு நல்லார். சிறுமலை - பெயர்.
|