1. காடுகாண் காதை



95
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபிற்
புண்ணிய சரவணம் பவகா ரணியோ
டிட்ட சித்தி யெனும்பெயர் போகி
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டாச் சிறப்பின் மூன்றுள வாங்குப்


93
உரை
97

       விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபின் - தேவர்களால் ஏத்தப்படும் வியக்கத்தக்க முறைமையினையுடைய, புண்ணிய சரவணம் பவகாரணியோடு இட்ட சித்தி எனும் பெயர் போகி-
புண்ணியசரவணம் பவகாரணி இட்டசித்தி என்னும் பெயர் யாண்டும் பரக்கப்பெற்று, விட்டு நீங்கா விளங்கிய பொய்கை முட்டாச் சிறப்பின் மூன்று உள - இடையறாத சிறப்பினை யுடையவாய்த் தம்மிற் சேர்ந்திருக்கின்ற விளக்கம் அமைந்த மூன்று பொய்கைகள் உள்ளன ;

       
ஆங்கு - அவற்றுள் ;