1. காடுகாண் காதை

98 புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்
விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர்


98
உரை
99

       புண்ணிய சரவணம் பொருந்துவிர் ஆயின் - புண்ணிய சரவணம் என்னும் பொய்கைக்கண் ஆடுவீராயின், விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவிர் - விண்ணவர் தலைவனாகிய இந்திரனாற் செய்யப்பெற்ற சிறந்த ஐந்திரம் என்னும் இலக் கணத்தை அறிவீர் ;

       
பொருந்துதல் - ஆடுதல். எய்துதல் - உணர்தல். விண்ணவர் கோமான் விழுநூல் - ஐந்திரம். ஐந்திரம் இந்திரனாற் செய்யப்பட்டது என்னும்பொருட்டு. "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்" என்பது தொல்காப்பியப் பாயிரம்.