1. காடுகாண் காதை

100 பவகா ரணிபடிந் தாடுவி ராயிற்
பவகா ரணத்திற் பழம்பிறப் பெய்துவிர்


100
உரை
101

       பவகாரணி படிந்து ஆடுவிர் ஆயின் - பவகாரணி என்னும் பொய்கைக்கண் மூழ்கி ஆடுவீராயின், பவகாரணத்திற் பழம் பிறப்பு எய்துவிர் - இப் பிறப்பிற்குக் காரணமாகவுள்ள
முற்பிறவியினை உணர்வீர் ;

       பவம் - பிறப்பு.