இட்ட சித்தி எய்துவிர் ஆயின் - இட்ட சித்தி எனப்படும் பொய்கைக்கண் மூழ்குவீராயின், இட்ட சித்தி எய்துவிர் நீரே - நீவிர் உள்ளத்து எண்ணியவெல்லாம் அடைவீர் ; இனி, இட்டசித்தி எய்துவிர் என்பதற்கு எண்வகைச் சித்திகளையும் அடைவீர் எனலும் பொருந்தும்.