ஓங்கு
உயர் மலையத்து உயர்ந்தோற் றொழுது - மிகவுயர்ந்த அம் மலைக்கண் எழுந்தருளிய மேலோனை
வணங்கி, சிந்தையில் அவன் தன் சேவடி வைத்து - உள்ளத்தின்கண் அவனுடைய சிவந்த திருவடிகளை
எண்ணி, வந்தனை - துதித்தலோடு, மும்முறை மலைவலஞ் செய்தால் - அம் மலையை மூன்று
முறை வலம் வந்தால் ;
அத்து
- சாரியை. உயர்ந்தோன் - திருமால். வைத்தல் - எண்ணுதல். வந்தனை - ஈண்டுப் போற்றல்.
|