நிலம்
பக வீழ்ந்த சிலம்பாற்று அகன்தலை - நிலம் பிளக்கும் வண்ணம் ஆழ்ந்த சிலம்பாற்றின்
அகன்ற கரைக் கண், பொலங்கொடி மின்னின் புயல் ஐங்கூந்தல் கடிமலர் அவிழ்ந்த கன்னிகாரத்து
- விளக்கத்தையுடைய மலர்கள் விரிந்த கோங்கினடிக்கீழ்ப் பொற்கொடி போன்ற ஒளியினையும்
மேகம்போலும் ஐங்கூந்தலினையும் உடைய, தொடி வளைத்தோளி ஒருத்தி தோன்றி - வளைந்த
வளையல் அணிந்த தோளினையுடைய ஓர் இயக்கமாது வெளிப்பட்டு ;
சிலம்பாறு
- பெயர். கன்னிகாரம் - கோங்கு. கன்னிகாரத்து மின்னினையும் கூந்தலினை முடைய தோளி
ஒருத்தி தோன்றி என்க. தொடி - வளைவு.
|