அருமறை
மருங்கின் - அரிய வேதத்தின் கண்ணவாய, ஐந்தினும் எட்டினும் வருமுறை எழுத்தின் மந்திரம்
இரண்டும் - ஐந்தானும் எட்டானும் வந்த முறையினையுடைய எழுத்துக்களையுடைய இரண்டு மந்திரங்களையும்,
ஒரு முறையாக உளங்கொண்டு ஓதி - ஒரு வழிப்பட்ட முறையானே
மனத்துட்
கொண்டு வாக்காற் றுதித்து, வேண்டியது ஒன்றின் விரும்பினிர் ஆயின் - அம் மூன்றனுள்
நீவிர் வேண்டிய தொரு பொய்கைக்கண் விரும்பி மூழ்குவிராயின், காண்டகு மரபின
அல்ல மற்றவை - அம் மூழ்குதலானாய பயன் தவஞ் செய் தார்க்கும் காணத்தகும் முறையினையுடையனவல்ல
;
எழுத்தின்
என்னும் இன் அசையெனக் கொண்டு, ஐந்தெழுத்தினும் எட்டெழுத்தினும் வருமுறை மந்திரம்
என விகுதி பிரித்துக் கூட்டு்தலுமாம்.
|