1. காடுகாண் காதை






145
காண்டகு பிலத்தின் காட்சி யீதாங
கந்நெறிப் படரீ ராயின் இடையது
செந்நெறி யாகும் தேம்பொழி லுடுத்த
ஊரிடை யிட்ட காடுபல கடந்தால்
ஆரிடை யுண்டோர் ஆரஞர்த் தெய்வம்
நடுக்கஞ் சாலா நயத்தின் தோன்றி
இடுக்கண் செய்யா தியங்குநர்த் தாங்கும்
மடுத்துடன் கிடக்கும் மதுரைப் பெருவழி
நீள்நிலங் கடந்த நெடுமுடி அண்ணல்
தாள்தொழு தகையேன் போகுவல் யானென


140
உரை
149

       ஆங்கு அந் நெறிப் படரீர் ஆயின் - அவ்விருவகைப் பட்ட வழிக்கண் செல்லீராயின், இடையது செந்நெறி ஆகும் - அவ் விரண்டன் இடைப்பட்ட வழி செவ்விய வழியாகும் ; தேம்
பொழில் உடுத்த ஊர் இடை இட்டகாடு பல கடந்தால் - அவ் வழியிலே தேன் ஒழுகும் சோலை சூழ்ந்த ஊர்கள் இடை யிடையேயுள்ள காடுகள் பலவற்றைக் கடந்துசெல்லின், ஆர் இடை உண்டு ஓர் ஆர் அஞர்த் தெய்வம் - அரிய வழியிடத்து மிக்க துன்பந்தரும் தெய்வம் ஒன்று உளது; நடுக்கம் சாலா நயத்தில் தோன்றி - அத் தெய்வம் நடுங்குதல் அமையாத இனிய வடிவோடு தோன்றி, இடுக்கண் செய்யாது இயங்குநர்த் தாங்கும் - துன்பம் செய்யாது வழிப்போவாரைத் தடுக்கும்; மடுத்து
உடன் கிடக்கும் மதுரைப் பெருவழி - அதனைத் தப்பின் அம்மதுரை செல்லும் வழி மூன்றும் ஒருங்கு சேர்ந்து கிடக்கும், ஆதலால் நீயிரும் சென்மின் ; நீள்நிலங் கடந்த நெடுமுடியண்ணல்
தாள் தொழு தகையேன் போகுவல் யான் என - யானும் நெடிய உலகத்தினைத் தாவியளந்த நெடுமுடியண்ணலின் திருவடிகளை வணங்கும் தன்மையுடையேனாகலிற் செல்குவல் என்று கூற;

       
தாங்கும் - தடுக்கும், அதனைப் தப்பின் எனவும், நீயிர் சென்மின், எனவும் விரித்துரைக்க, மறையோன் வாய்மொழிகளிலிருந்து, தீர விசாரித்தல், கட்டுரைவன்மை, சமயப்பற்று என்னும் பண்புகள்
அவன்பால் மிக்குள்ளமை புலனாம்.