மாமறை
யோன்வாய் வழித்திறங் கேட்ட
காவுந்தி யையையோர் கட்டுரை சொல்லும்
150
உரை
151
மா
மறையோன் வாய் வழித்திறம் கேட்ட காவுந்தி ஐயை ஓர் கட்டுரை சொல்லும் - பெருமையுடைய
அம் மறை யோன் வாயால் நெறியின் இயல்பு கேட்ட கவுந்தியடிகள் ஓர் பொருள் பொதிந்த
உரையை உரைப்பாராயினார் ;