1. காடுகாண் காதை

165




170
பின்றையும் அவ்வழிப் பெயர்ந்துசெல் வழிநாட்
கருந்தடங் கண்ணியும் கவுந்தி யடிகளும்
வகுந்துசெல் வருத்தத்து வழிமருங் கிருப்ப
இடைநெறிக் கிடந்த இயவுகொள் மருங்கின்
புடைநெறிப் போயோர் பொய்கையிற் சென்று
நீர்நசைஇ வேட்கையின் நெடுந்துறை நிற்பக்


165
உரை
170

        பின்றையும் அவ்வழிப் பெயர்ந்து செல் வழிநாள் - பின்னரும் தங்கி அந் நெறியிலே மீண்டும் செல்கின்ற பின்னாளில், கருந்தடங்கண்ணியும் கவுந்தியடிகளும் வகுந்து செல் வருத்தத்து
வழிமருங்கு இருப்ப - கரிய பெரிய கண்ணினையுடைய கண்ணகியும் கவுந்தியடிகளும் வழிச் சென்ற வருத்தத்தினால் வழியின் பக்கத்து இருக்க, இடைநெறிக் கிடந்த இயவுகொள் மருங்கின் - முன்னர்க் கூறிய இடைவழியிற் கிடந்த செலவினைக் கொண்ட இடத்திலே, புடைநெறிப் போய் ஓர் பொய்கையிற் சென்று நீர் நசைஇ வேட்கையின் நெடுந்துறை நிற்ப - பக்க வழியிலே சென்று ஓர் பொய்கைக் கரைக்கண் போய் நீரை உண்ணுதலை விரும்பி அவ் விருப்பத்தானே பெரிய துறையிடத்துக் கோவலன் நிற்க. ;

        பின்றை - பின்னை. வழிநாள் - மறுநாள். வழி. இடை நெறி என்பதனை நெறியிடை என்னலும் பொருந்தும்.