கான் உறை தெய்வம் காதலிற் சென்று
- முன் அம் மறையோன் கூறிய காட்டின்கண் உறையும் அவ் வாரஞர்த் தெய்வம் காதலுடன்
சென்று, நயந்த காதலின் நல்குவன் இவன் என - மாதவியிடத்து விரும்பிய காதலினால்
இவன் அன்பு கொள்வான் என்று கருதி , வயந்தமாலை வடிவில்
தோன்றி - அவள் தோழியாகிய வசந்தமாலையின் வடிவோடு தோன்றி, கொடி நடுக்கு உற்றது
போல - பூங்கொடி நடுக்க முற்றது போல, ஆங்கு அவன் அடி முதல் வீழ்ந்து ஆங்கு அருங் கணீர்
உகுத்து - அவ்விடத்து அக் கோவலனுடைய அடிக்கண் விழுந்து அரிய கண்ணீரைச் சிந்தி;
வயந்தமாலையின் வடிவு கொள்ளின் நல்குவனெனக் கருதி அவள் வடிவுடன் தோன்றி யென்க.
அடிமுதல் - அடியிடம். பின் வரும் ஆங்கு, அசை, அருங்கணீர் என்றது பொய்க் கண்ணீர்
தானும் சிறிது வருகின்றதென்பது தோன்ற நின்றது. சென்று தோன்றி வீழ்ந்து உகுத்து என்க.
|