1. காடுகாண் காதை

15 வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதொ றூழிதொ றுலகங் காக்க


15
உரை
16

       வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை - மன்னர் யாரினும் பெரிய தகையை யுடையோனாகிய எம் மன்னன் வாழ்வானாக, ஊழிதொறு ஊழிதொறு உலகம் காக்க - பல்லூழி
இவ் வுலகினை அவனே காப்பானாக ;

       
தொறும் என்பது தொறுவென நின்றது.