வாசமாலையின் எழுதிய மாற்றம்
தீது இலேன் - மணம் பொருந்திய மாலையின்கண் எழுதிய மொழியில் தவறுதலுடையேன் அல்லேன்,
பிழை மொழி செப்பினை - நீ தவறுடைய
மொழிகளைக் கூறினை போலும், ஆதலிற் கோவலன் செய்தான் கொடுமை என்று - அதனானனறே
கோவலன் எனக்குக் கொடுமை செய்தான் என்று கூறி, என்முன் மாதவி மயங்கி வான் துயர்
உற்று - மாதவி என் முன்பு மயங்கி வீழ்ந்து மிக்க துயரத்தை அடைந்து ;
இங்குக்
கூறிய வரலாற்றினை வேனிற் காதையிற் காண்க. கோவலன் கொடுமை செய்தான் என்றது தன்னை
விட்டுப் பிரிந்தமையை.
|