1. காடுகாண் காதை

201 தாமரைப் பாசடைத் தண்ணீர் கொணர்ந்தாங்கு
அயாவுறு மடந்தை அருந்துயர் தீர்த்து


201
உரை
202

        தாமரைப் பாசடைத் தண்ணீர் கொணர்ந்து ஆங்கு அயா உறு மடந்தை அருந்துயர் தீர்த்து - பசிய தாமரை யிலைக் கண் தண்ணீரைக் கொண்டு வந்து அவ்விடத்துச் சோர்வுற்றிருந்த கண்ணகியின் அரிய துன்பத்தினை நீக்கி ; அடை - இலை. அயா - தளர்ச்சி. அருந்துயர் - வழிச்செலவானும் நீர் வேட்கையானும் ஆயது.