1. காடுகாண் காதை



205
மீதுசெல் வெங்கதிர் வெம்மையின் தொடங்கத்
தீதியல் கானஞ் செலவரி தென்று
கோவலன் றன்னொடும் கொடுங்குழை மாதொடும்
மாதவத் தாட்டியும் மயங்கத ரழுவத்துக்


203
உரை
206

        மீதுசெல் வெம்கதிர் வெம்மையில் தொடங்க - வானிலெழுந்து செல்லும் ஞாயிறு வெம்மை செய்தலைத் தொடங்கலான், தீது இயல் கானம் செல அரிது என்று - தீமை மிக்கு நிகழ்கின்ற இக் காடு இனி வழிச் சேறற்கு அரிது என்று கருதி, கோவலன் தன்னொடும் கொடுங்குழை மாதொடும் மாதவத்தாட்டியும் மயங்கு அதர் அழுவத்து - கோவலனுடனும் வளைந்த காதணியினையுடைய கண்ணகியுடனும் கவுந்தியடிகளும் வழிமயக்கத்தினையுடைய நிலப் பரப்பின்கண் ;

       
தீதுஇயல் கானம் - பாலைத் தன்மை நிகழ்கின்ற கானம்.