1. காடுகாண் காதை



25
திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச்
செங்கணா யிரத்தோன் திறல்விளங் காரம்
பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி


23
உரை
25

       திங்கட் செல்வன் திருக்குலம் விளங்க - திங்களாகிய செல்வனுடைய மரபு விளக்கமுற, செங்கண் ஆயிரத்தோன் திறல் விளங்கு ஆரம் - ஆயிரங்கண்களையுடைய இந்திரன் பூட்டிய
வலி விளங்கிய ஆரத்தை, பொங்கு ஒளி மார்பிற் பூண்டோன் வாழி - பொலிவுற்ற விளக்கத்தினையுடைய மார்பின் கண் பூண்ட பாண்டியன் வாழ்வானாக ;

       விளங்கப் பூண்டோன் என இயைக்க. இங்ஙனம் ஆரம் பூண்டதனால் பாண்டியனைத் 'தேவரார மார்பன்' என வாழ்த்துக் காதையுள் வழங்குவர்.