யாது நும் ஊர் ஈங்கு என் வரவு எனக் கோவலன் கேட்ப-நும் ஊர்யாது இங்கு நீரவருவதற்குக் காரணம் என்னை எனக் கோவலன் கேட்க ; வாழ்க காக்க தென்னவன் வாழி பூண்டோன் வாழி மன்னவன் வாழ்கென வாழ்த்தி வந்திருந்தோனைக் கோவலன் கேட்ப என்க.