உரிவை மேகலை உடீஇப் பரிவொடு கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்
பரிவொடு கரு வில் வாங்கிக் கையகத்துக் கொடுத்து - வருத்தத்துடன் வயிர வில்லை வளைத்து அவள் கைக்கண் கொடுத்து ; பரிவு - அன்புமாம். வில் வாங்கி என்பதற்கு வில்லை எடுத்து எனலும் அமையும். வாங்குதல் - எடுத்தல்.