பாவையும் - மதனப்பாவை முதலியனவும், கிளியும் தூவி அம் சிறைக் கானக் கோழியும் நீல்
நிற மஞ்ஞையும் - கிளியும் சிறு மயிரினையுடைய அழகிய சிறகினையுடைய காட்டுக் கோழியும்
நீலநிறம் பொருந்திய மயிலும், பந்தும் கழங்கும் தந்தனர் பரசி - பந்தும் கழங்கும்
ஆகிய இவற்றைக் கொடுத்துத் துதித்து ;
தூவி - சிறகின் மயிர் ; சூட்டும்
ஆம். தந்தனர் - முற்றெச்சம்.
|