வண்ணமும் சுண்ணமும் தண்ணறும் சாந்தமும் - வண்ணக்குழம்பும் பொற்பொடியும் குளிர்ந்த
மணமுள்ள சந்தனமும், புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் - புழுக்கப்பட்டனவும்
எள்ளுண்டையும் நிணத்தொடு கூடிய சோறும், பூவும் புகையும் மேவிய விரையும் - மலர்களும்
புகையும் விரும்பிய மணப்பொருள்களும் ஆய இவற்றை, ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்
வர - பணி செய்யும் மறப்பெண்கள் தாங்கினராய்ப் பின்னே செல்ல ;
வண்ணம் - தோள் முதலியவற்றில்
நிறமெழுதுங் குழம்பு. புழுக்கல் - அவரை, துவரை முதலியன. நோலை - எள்ளுண்டை. விழுக்கு
- நிணம். மடை - சோறு. ஏந்தினர், முற்றெச்சம்.
|