ஆறு எறி பறையும் சூறைச் சின்னமும் - வழிபறிக்குங் கால் கொட்டும் பறையும் சூறைகொள்ளுங்கால்
ஊதும் சின்னமும், கோடும் குழலும் பீடு கெழு மணியும் - கொம்பும் புல்லாங்குழலும் பெருமை
பொருந்திய மணியும் ஆய இவை, கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் நிறீஇ - தம்மிற் கூடி
ஒலிப்ப இவற்றை அவ் வணங்கின் முன்னே நிறுத்த ;
கோடு - துத்தரிக்கொம்பு என்ப
; சங்குமாம். நிறீஇ என்பதனை நிறுத்தவெனத் திரிக்க. 'அணங்கு மெய்ந்நிறீஇ' எனப்
பாடங்கொண்டு, அக் குமரிமேல் அணங்கை யேற்றி என்றுரைப்பர் அரும் பதவுரையாசிரியர்.
|