இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக் கணவனோடு இருந்த மணமலி கூந்தலை - தம்முள்
ஒத்த மலர்போலும் சிறிய அடிகள் வருந்தினவளாய்த் துன்புற்றுத் தன் கணவனொடு தங்கி
யிருந்த மணம் நிறைந்த கூந்தலையுடைய கண்ணகியைச் சுட்டி, இவளோ - இப் பெண், கொங்கச்
செல்வி - கொங்கு நாட்டிற்குச் செல்வமாயுள்ளவள், குடமலை யாட்டி - குடமலை நாட்டினையாளும்
செல்வி, தென்தமிழ்ப் பாவை - தென்றமிழ் நாட்டின் பாவை, செய்த தவக் கொழுந்து
- உலகோர் செய்த தவத்தின் கொழுந்து போல்வாள், ஒரு மா மணியாய் உலகிற்கு ஓங்கிய
திரு மா மணி எனத் தெய்வம் உற்று உரைப்ப - இவ்வுலகிற்கு ஒப்பற்ற முழு மாணிக்கம்
போன்று உயர்ந்த அழகிய பெண்மணி என்று சாலினி தெய்வத்தன்மை அடைந்து இவளை மிகுத்துக்
கூற ;
சாலினி கண்ணகிக்கு மேல் நிகழ்வது
கூறினாள். கண்ணகி இன்னதன்மையளாதலைக் "கொங்கிளங் கோசர்" என்னும் உரை பெறு கட்டுரையா
னறிக.
|