2. வேட்டுவ வரி


பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டியென்று
அரும்பெறற் கணவன் பெரும்புறத் தொடுங்கி
விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப



51
உரை
53

        பேதுறவு மொழிந்தனள் மூதறிவாட்டி என்று - அது கேட்ட கண்ணகி இம் மூதறிவுடையாள் மயக்கத்தாற் கூறினாள் என்று, அரும்பெறற் கணவன் பெரும்புறத்து ஒடுங்கி விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப - பெறுதற்கரிய கணவனது பெரிய புறத்தே மறைந்து புதிய புன்முறுவல் தோற்றினவளாய் நிற்க ;

        தமது பெருமையினைப் பிறர் கூறுங்கால் நாணுதல் பெரியோர் இயல்பு. 'விருந்தின் மூரல்' என்றார், இவள் நெடுநாள் முறுவல் ஒழிந்திருந்தாள் என்பது தோன்ற. நாணினால் மறைந்தாள் என்க.