மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்
மதியின் வெண்தோடு சூடும் சென்னி - பிறையாகிய வெள்ளிய இதழைச் சூடும் சென்னியினையும், நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து - நெற்றியினைத் திறந்து விழித்த இமையாத கண்ணினையுமுடைய ; மதி - ஈண்டுப் பிறை ; இன்சாரியை அல்வழிக்கண் வந்தது.