பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
பவள வாய்ச்சி - பவளம் போன்ற வாயினையுடையாள், தவள வாள் நகைச்சி - வெள்ளிய ஒளி பொருந்திய நகையினையுடையாள், நஞ்சு உண்டு கறுத்த கண்டி - நஞ்சினை உண்டதனாற் கறுத்த கண்டத்தினையுடையாள் ;