2. வேட்டுவ வரி



10

தெய்வ முற்று மெய்ம்மயிர் நிறுத்துக்
கையெடுத் தோச்சிக் கானவர் வியப்ப
இடுமுள் வேலி எயினர்கூட் டுண்ணும்
நடுவூர் மன்றத் தடிபெயர்த் தாடிக்


8
உரை
11

       தெய்வம் உற்று மெய்ம்மயிர் நிறுத்துக் கை யெடுத்து ஓச்சிக் கானவர் வியப்ப - மறவர் வியக்கும் வண்ணம் தெய்வத் தன்மையை அடைந்து மெய்ம்மயிர் சிலிர்த்துக் கைகளை எடுத்து உயர்த்தி, இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும் நடுவூர் மன்றத்து அடிபெயர்த்து ஆடி - முள்வேலி இடப் பெற்ற மறவர் கூடி ஒருங்கு உண்ணுதலையுடைய ஊர் நடுவில் உள்ள மன்றத்திலே கால்களைப் பெயர்த்து ஆடி ;

       கானவர் வியப்ப ஆடி என்க. வேலியை உடைய ஊர் எயினர் கூட்டுண்ணுமூர் என இயைக்க. கூட்டுண்டல் - கவர்ந்த பொருளைச் சேர்ந்துண்டல். நடுவூர் என்பது முன்பின்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை.