2. வேட்டுவ வரி


நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்



57
உரை
58

        வெஞ்சினத்து அரவு நாண் பூட்டி நெடுமலை வளைத்தோள் - கொடிய சினத்தினையுடைய வாசுகி என்னும் பாம்பாகிய நாணைப் பூட்டி நெடிய மேருவாகிய வில்லை வளைத்தவள்;

        அரவு நாண் என்பதற்கேற்ப மலை வில் என உரைக்கப்பட்டது. வில்லை வளைத்து நாண் பூட்டியவள் எனப் பிரித்துக் கூட்டுக.