சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி இடப் பக்கத்துச்- சிலம்பும் வலப் பக்கத்து வீரக்
கழலும் ஒலிக்கும் சிறிய அடிகளையும், வலம்படு கொற்றத்து வாய் வாட் கொற்றவை - மேலான
வெற்றியையும் வினை வாய்க்கப் பெறும் வாளினையுமுடைய கொற்றவை ;
இடப்பாகம் கொற்றவையும் வலப்பாகம்
சிவபெருமானும் ஆய உருவமாகலான் 'சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி' என்றார். வலம்-மேன்மை.
|