2. வேட்டுவ வரி


தலைமிசை நின்ற தையல் பலர்தொழும்
அமரி குமரி கவுரி சமரி
சூலி நீலி மாலவற் கிளங்கிளை



66
உரை
68

        பலர் தொழும் அமரி - யாவரும் வணங்கும் இறப்பில்லாதவள், குமரி - இளமை பொருந்தியவள், கவுரி - கௌர நிறத்தையுடையவள், சமரி - போரில் வல்லவள், சூலி - சூலம் ஏந்தியவள், நீலி - நீலநிறமுடையோள், மால் அவற்கு இளங்கிளை- திருமாலுக்கு இளையவள் ;

        இளங்கிளை - இளையவுறவினர் ; இச் சொல், தம்பி, தங்கை, மைத்துனர், தோழர் முதலிய இளைய முறையினர் பலரையுங் குறிக்க வழங்கும். அமரி - அலங்கரித்தலில்லாதவள் ; குமரி - அழிவில்லாதவள் ; கிளை - கிளி போல்வாள் எனலுமாம். கிளை - கிள்ளை.