2. வேட்டுவ வரி




2

       
             வேறு

செம்பொன் வேங்கை சொரிந்தன சேயிதழ்
கொம்பர் நல்லில வங்கள் குவிந்தன
பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கிளந்
திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே ;



2
உரை
2

        "செம்பொன் ...... முன்றிலே" செம்பொன் வேங்கை சொரிந்தன - வேங்கை மரங்கள் சிவந்த பொன் போன்ற பூக்களைச் சிந்தின; சேயிதழ் கொம்பர் நல் இலவங்கள் குவிந்தன - நல்ல இலவமரங்கள் தம் கொம்புகளிலுள்ள சிவந்த பூவிதழ்களை உதிர்த்துக் குவித்தன ; பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கு - புன்க மரங்கள் பழம் பூக்களாகிய வெள்ளிய பொரியைச் சிந்தின ; இளந்திங்கள் வாழ் சடையாள் திருமுன்றிலே - பிறைதங்கிய சடையை உடையாளது அழகிய முன்றிலின்கண் ;

        பொன் - பொன்போன்ற பூ. குவிந்தன - குவித்தன; விகாரம். பொங்கர் - பழம்பூ; கொம்பு, பொதுளல் எனலுமாம்.