"கொற்றவை ....... குலனும்" கொற்றவை கொண்ட அணிகொண்டு நின்ற இப் பொற்றொடி
மாதர் தவம் என்னை கொல்லோ - துர்க்கை தனக்கு அணியாகச் கொண்டவற்றைத் தான்
அணியும் அணியாகக் கொண்டு நின்ற இந்தப் பொன்னாலாய தொடியினையுடைய குமரி முன் செய்த
தவம் யாதோ ; பொற்றொடி மாதர் பிறந்த குடிப் பிறந்த விற்றொழில் வேடர் குலனே
குலனும் - பொன் வளையலணிந்த இக் குமரி பிறந்த குடியின்கண் தோன்றிய விற்றொழிலில்
வல்ல மறவர் குலமே சிறந்த குலம் ;
கொற்றவை அணிகொண்டு நின்ற மாதர்
- மறவர் தொல்குடிக் குமரி. இதனை, "தொல்குடிக் குமரியைச், சிறுவெள் ளரவின் குருளை
நாண் சுற்றி" என்பது முதலாகத் தொடங்கும் அடிகளானுணர்க. சாலினி யென்பர் அடியார்க்கு
நல்லார். கொல், ஓ - அசைகள்.
|