2. வேட்டுவ வரி

5

ஐயை திருவின் அணிகொண்டு நின்றவிப்
பையர வல்குல் தவமென்னை கொல்லோ
பையர வல்குல் பிறந்த குடிப்பிறந்த
எய்வில் எயினர் குலனே குலனும் ;



5
உரை
5

        "ஐயை திருவின்............குலனும்" ஐயை திருவின் அணி கொண்டு நின்ற இப் பையரவு அல்குல் தவம் என்னை கொல்லோ - கொற்றவையின் அழகினை ஒப்ப அழகு கொண்டு நின்ற இந்த அரவின் படம் போன்ற அல்குலினையுடையாள் செய்த தவம் யாதோ, பையரவு அல்குல் பிறந்த குடிப்பிறந்த எய் வில் எயினர் குலனே குலனும் - இக் குமரி பிறந்த குடிக்கண் தோன்றிய அம்பினை எய்யும் வில்லினையுடைய வேடர் குலமே சிறந்த குலம் ;

திரு - அழகு. பை - படம். அரவுப்பை என மாறுக.