"சங்கமும்.....நிற்பாய்" சங்கமும் சக்கரமும் தாமரைக் கை ஏந்தி - சங்கினையும்
சக்கரத்தினையும் தாமரை போன்ற கைகளில் தாங்கி, செங்கண் அரிமான் சின விடைமேல்
நின்றாயால் - சிவந்த கண்களையுடைய சிங்கமாகிய சினம் பொருந்திய விடைமீது நின்றாய்,
கங்கை முடிக்கு அணிந்த கண்ணுதலோன் பாகத்து - கங்கையினைச் சடைமுடியின்கண் அணிந்த
நெற்றிக் கண்ணையுடையோனது இடப் பாகத்து, மங்கை உருவாய் மறை ஏத்தவே நிற்பாய் -
பெண்ணுருவாகி வேதங்கள் போற்ற நிற்பாய் இஃதென்ன மாயமோ ;
அரிமான் ஊர்தியென்பார் விடையென்றார்
; விடையும் ஊர்தி யாகலின். இவை மூன்றும் முன்னிலைப் பரவல்.
|