ஆங்கு - அவ்விடத்து ; கொன்றையும் துளவமும் குழுமத் தொடுத்த - கொன்றை மலரும் துளபமும்
சேரக் கட்டிய, துன்று மலர்ப்பிணையல் தோள்மேல் இட்டு - மலர் செறிந்த மாலையைத்
தோளின்மீது சூடி, ஆங்கு அசுரர் வாட அமரர்க்கு ஆடிய குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே
- குமரியின் கோலத்தொடு அசுரர் வாடும் வண்ணம் தேவர்க்கு வெற்றியுண்டாக ஆடிய மரக்காற்
கூத்து ஆடுதற்கு உள்படும்;
உள்படும் - ஒருப்படும் ; ஆடும் என்றுமாம். இது வென்றிக் கூத்து.
|