மறக்
குடித் தாயத்து வழி வளஞ் சுரவாது அறக்குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும் - மறக்குடியிற்
பிறந்த உரிமையை உடைய மறவரும் வழிக்கண் பறிக்கும் வளம் சுரக்கப் பெறாது அறவர்
குடிப் பிறந்தோர் போலச் சினங் குறைந்து செருக்கு அடங்கி விட்டனர் ;
வழிவளம் - வழிப்போவாரைப் பறிக்கும்
வளம். மறக்குடித் தாயத்து எயினர் அடங்கினர் என்க. இனி, தாயத்து வழிவளம் என்பதற்குத்
தாயமாகிய வழிவளம் எனலுமாம் ; ஈண்டு அத்து அல்வழிக்கண் வந்ததென்க. இது முன்னிலைப்
புறமொழி.
|