"இளமாவெயிற்றி ..... நிறைந்தன" இளமா எயிற்றி - மாமை நிறத்தையுடைய இளமை பொருந்திய
வேட்டுவ மகளே, இவை காண் நின் ஐயர் தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள் -
இவற்றைக் காண்பாய் நினது தந்தை முதலியோர் முன்னாளில் வேட்டையிற் கவர்ந்த நல்ல
பசுக் கூட்டங்கள் ; கொல்லன் துடியன் கொளைபுணர் சீர் வல்ல நல்லியாழ்ப் பாணர்
தம் முன்றில் நிறைந்தன - வேல் வடித்துத் தரும் கொல்லனும் துடி கொட்டும் துடியனும்
பாட்டுக்களைத் தாளத்துடன் புணர்க்கவல்ல நல்ல யாழினையுடைய பாணரும் எனப்பட்ட இவர்களுடைய
முன்றிலின்கண் நிறைந்துள்ளன ;
நின் ஐயர் தந்த நிரைகள் முன்றிலில்
நிறைந்தன இவைகாண் என முடிக்க. இது, 11"படை
இயங்கரவம்" என்னும் சூத்திரத்துக் 'கொடை' என்னுந் துறைப்பாற்படும்.
|