2. வேட்டுவ வரி



15

             வேறு

முருந்தேர் இளநகை காணாய்நின் னையர்
கரந்தை யலறக் கவர்ந்த இனநிரைகள்
கள்விலை யாட்டிநல் வேய்தெரி கானவன்
புள்வாய்ப்புச் சொன்னகணி முன்றில் நிறைந்தன ;



15
உரை
15

        "முருந்தேரிளநகை ....... நிறைந்தன" முருந்து ஏர் இளநகை காணாய் - மயிலிறகின் அடியை ஒத்த அழகிய முற்றாத நகையினையுடையாய் காண்பாய், நின் ஐயர் கரந்தை அலறக் கவர்ந்த இன நிரைகள் - உனது ஐயன்மார் கரந்தையார் அலறும் வண்ணம் கவர்ந்துகொண்டு வந்த பசுக் கூட்டங்கள், கள்விலையாட்டி. நல் வேய் தெரி கானவன் புள்வாய்ப்பச் சொன்ன கணி முன்றில் நிறைந்தன - கள் விற்பவளும் நல்ல உளவறிந்து கூறும் ஒற்றனும் புள் நிமித்தப் பொருத்தம் கூறிய நிமித்திகனும் ஆகிய இவர்களது முன்றிலின்கண் நிறைந்தன ;

        கரந்தையார் - ஆனிரை மீட்போர். வேய் - ஒற்று. புள் - நிமித்தம். கணி - நிமித்திகன் ; சோதிடன்.