2. வேட்டுவ வரி



16

             வேறு

முகயமல ருண்கண்ணாய் காணாய்நின் னையர்
அயலூர் அலற எறிந்தநல் ஆனிரைகள்
நயனில் மொழியின் நரைமுது தாடி
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன;
துறைப்பாட்டுமடை.



16
உரை
16

        "கயமலர் ...... நிறைந்தன" கயமலர் உண் கண்ணாய் காணாய் - குளத்துக்கண் தாமரை மலர்போலும் மையுண்ட கண்களையுடையாய் நீ காண்பாய், நின் ஐயர் அயலூர் அலற எறிந்த நல் ஆனிரைகள் - நினது ஐயன்மார் பகைவர் ஊர் வருந்திக் கூவும் வண்ணம் அவர்களை எறிந்துகொண்டு வந்த பசுக்கூட்டங்கள், நயன்இல் மொழியின் நரைமுது தாடி எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன -- கொடுஞ் சொல்லினையும் நரைத்த தாடியினையும் உடைய முதிர்ந்த மறவரும் மறத்தியருமாகிய இவர்களுடைய முன்றிலின்கண் நிறைந்துள்ளன;

        கயமலர் - பெரியமலர் எனலுமாம் ; 1"தடவும் கயவும் நளியும் பெருமை" என்பவாகலான். நயன் இல்மொழி - இனிமையில்லாத சொல். நயனில் மொழியை எயினர் எயிற்றியர்க்கும், நரைத் தாடியை எயினர்க்கும் இயைக்க. இதுவும் மேற்கூறிய செய்யுளும் ஆகிய இரண்டும் "படை இயங்கரவம்" என்னும் சூத்திரத்துப் "பாதீடு" என்னும் துறையின்பாற் படும். இம் மூன்றினையுமே 'கொடை' என்னுந் துறைப்பாற் படுத்துவர் அடியார்க்கு நல்லார். இம் மூன்றும் கண்டார் கூற்று.

துறைப்பாட்டு மடை - துறைப்பாட்டுக்களை இடையே மடுத்தல்,


1. தொல், உரி. 22.