2. வேட்டுவ வரி

கலையமர் செல்வி கடனுணி னல்லது
சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்



16
உரை
17

       கலை அமர் செல்வி கடன் உணின் அல்லது - கலையாகிய ஊர்தியினையுடைய கொற்றவை தான் கொடுத்த வெற்றியின் விலையாகிய உயிர்ப்பலியை உண்டாலல்லது, சிலை அமர் வென்றி கொடுப்போள் அல்லள் - நும் வில்லிற்குப் பொருந்திய வெற்றியைக் கொடாள் ;

       சிலை அமர்வென்றி எனபதற்கு வில் விரும்பும் வென்றி எனப் பொருள்கொண்டு, உடையான தொழில் உடைமைமேல் ஏற்றப்பட்டது எனக் கூறினும் பொருந்தும்.