2. வேட்டுவ வரி



22

             வேறு

மறைமுது முதல்வன் பின்னர் மேய
பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறர்நாட்டுக்
கட்சியுங் கரந்தையும் பாழ்பட
வெட்சி சூடுக விறல்வெய் யோனே.



22
உரை
22

        "பொருள் கொண்டு....செய்குவாய்" பொருள் கொண்டு புண்செயின் அல்லதை யார்க்கும் அருள் இல் எயினர் இடுகடன் உண்குவாய் - வழிப்போவார் பொருளைப் பறித்துக்கொண்டு அவர்க்குத் துன்பம் செய்தல் அல்லது எவரிடத்தும் கருணை இல்லாத வேட்டுவர் இடும் பலிக்கடனை உண்பாயாக ; மருதின் நடந்து - இரு மருத மரங்களின் இடையே நடந்து அவற்றைச் சாய்த்து, நின் மாமன் செய் வஞ்ச உருளும் சகடம் உதைத் தருள் செய்குவாய் - நின் மாமனாகிய கஞ்சன் செய்த வஞ்சத்தால் தோன்றிய உருண்டுவரும் சகடத்தை உதைத்தருளினாய் ;


        அல்லதை - ஐ சாரியை. "சுடரொடு திரிதரும்" என்பது முதல் ஆறுதாழிசைகளும் கொற்றவையைப் பரவுவார் வார்த்தை என்பர் அரும்பதவுரையாசிரியர். 1"மறவர், பொருள்கொண்டு புண்செயினல்லதை யன்போ, டருள்புற மாறிய வாரிடை யத்தம்" என்பது பாலைக் கலி. றிற்று.


1. 1. கலி, 15,