2. வேட்டுவ வரி



23

             வேறு

பொருள்கொண்டு புண்செயி னல்லதை யார்க்கும்
அருளில் எயினர் இடுகடன் உண்குவாய்
மருதின் நடந்துநின் மாமன்செய் வஞ்ச
உருளுஞ் சகடம் உதைத்தருள் செய்குவாய் ;
.



23
உரை
23

        "மறைமுது முதல்வன்....வெய்யோனே" மறைமுது முதல்வன் பின்னர் மேய - வேதங்களை அருளிய முதிய முதல்வனாகிய சிவபெருமானுக்குப் பின்னோன் ஆகிய அகத்தியன் எழுந்தருளிய, பொறை உயர் பொதியிற் பொருப்பன் - பொறைகளையுடைய உயர்ந்த பொதிய மலையை உடைய பாண்டியன், பிறர் நாட்டுக் கட்சியும் கரந்தையும் பாழ்பட வெட்சி சூடுக விறல் வெய்யோனே - பகைவருடைய முனையிடமும் அவர் நிரை மீட்கும் தொழிலும் பாழ்படும் வண்ணம் வெற்றியை விரும்புவோனாகிய அவன் வெட்சி மாலையைச் சூடுவானாக ;

        பொருப்பனாகிய விறல் வெய்யோன் பாழ்பட வெட்சி சூடுக எனக் கூட்டுக. மறை சிவபிரான் வாய்மொழி யென்பது 1"நன்றாயிருந்த . நீணிமிர்சடை, முதுமுதல்வன் வாய்போகா, தொன்று புரிந்த வீரிரண்டின்" என்பதனாலும் அறியப்படும். மறைமுது முதல்வன் - பிரமன் என்பாருமுளர். அகத்தியன் இறைவனோடு ஒப்பத் தென்றிசை தாழ இருந்ததனால், "மறைமுது முதல்வன் பின்னர்" என்றார். 'பின்னர்' என்றது ஈண்டுத் தம்பி என்னும் பொருட்டன்று ; ஒப்ப அடுத்த நிலையில் உள்ளோன் என்னும் பொருட்டு, இதனை, 2"ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன், பின்சாரப் பொய்யாமை நன்று" என வருவது கொண்டு உணர்க.

        3"தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற், றொனமுது கடவுட் பின்னர் மேய, வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந" என்பதும் ஈண்டும் அறியற்பாலது. இதிலுள்ள 'தொன்முது கடவுள்' என்பதற்கு அகத்தியனார் என்று பொருள் கூறுவது சிறப்புடைத்தன்று. பொறை - குன்று, பொற்றை ; சந்தனம் அகில் முதலிய மரங்களாற் சுமைமிக்க என்றுமாம். கட்சி - காடு; போர்முனை. இத் தாழிசையாறும் கொற்றவையைப் பரவுவார் கூற்று.

        கொற்றவை இறைவனுக்குக் கிரியாசக்தி யாகலின் நுதல்விழி, கறைமிடறு, புலியுரி, சூலம் முதலிய கோலங்களும், நஞ்சுண்டல் முதலிய செயல்களும் கூறப்பட்டன. மாயோனுக்குத் தங்கை யாகலின் அவன் செய்கையாகிய மருதினடந்ததும், சகடமுதைத்ததும் சார்த்தி உரைக்கப்பட்டன ; மாயோனும் இறைவற்கு ஓர் சக்தியாதல் உணரற்பாற்று.

இது பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா.

வேட்டுவவரி முற்றிற்று.


1. புறம், 165. 2. குறள். 33; 3. 3. மதுரைக். 40-3.